தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து பெரிதளவில் பேசப்படாமல் இருந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து மன உளைச்சலால் வீட்டினைவிட்டு வெளியேறினார். இதைதொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
பிக்பாஸில் ஆரவை காதலித்து தோல்வியடைந்த பின் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தியும் ரசிகர்களுடன் இணையத்தில் பேசியும் வந்தார்.
இந்நிலையில், Love என்று பதிவிட்டு ஆண் நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.
Love pic.twitter.com/MFJsQylQeJ
— Oviyaa (@OviyaaSweetz) January 14, 2021