இயக்குனர் சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக விளங்குபவர்.
இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சென்ற வருடம் OTT-யில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் அவரின் பெயரில் ட்விட்டரில் இயக்கப்பட்டு வரும் போலி கணக்கில் ‘T61’ என பதிவிட பட்டிருந்தது.
இதனால் ரசிகர்கள் பலரும் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கப்போவதாக தகவலை பரப்பி வந்தனர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வேதிகா “சுதா கொங்கரா எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை, அது ஒரு போலியான கணக்கு” என பதிவிட்டுள்ளார்.







