ருத்தி வீரன் படத்தின் முத்தழகு கேரக்டர் மூலம் இளைஞர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை பிரியாமணி. சில படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
வெப் சீரிஸில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து வந்தவருக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கான Naarappa படத்தில் நடித்து வந்தவர் அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கப்போகிறாராம்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான Lucifer படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இதில் மோகன் லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்க அவருக்கு தங்கையாக பிரியாமணி நடிக்கவுள்ளாராம். சிரஞ்சீவியுடன் பிரியாமணி இணைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சிரஞ்சீவியின் அபிமானியாக ஒருவரையும், முதலமைச்சராக முக்கிய பிரபலத்தையும் நடிக்க வைக்கவுள்ளார்களாம்.







