பா. ரஞ்ஜீத் இயக்கத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.
இப்படம் வெளியான பிறகு மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி குரூப் 1 தேர்வில் கேள்வி ஒன்று கேட்டகப்பட்டுள்ளது.
இந்த கேள்வியில் ” தலைசிறந்த படைப்பான ‘ பரியேறும் பெருமாள் ‘ படத்தை பற்றி விமர்சனம் குறித்து கீழ் காணும் கூற்றில் சரியான ஒன்றை தேர்வு செய்யவும் ” என கேட்டகப்பட்டுள்ளது.
இதற்கு மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்ட, அதில் ஒன்றை தேர்தெடுவும் என்று குறிப்பிட்டுள்ளது.
இது பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
#நீலம் தயாரிப்பில் @beemji,@mari_selvaraj இயக்கிய #பரியேறும்_பெருமாள் திரைப்படத்தை 'தலைச்சிறந்த படைப்பு' என குறிப்பிட்டு,குரூப் 1தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.வினாவை இடம்பெற செய்து, தலைச்சிறந்த படைப்பு என அங்கிகரித்த தேர்வுக்குழுவிற்கு நன்றிகள்!
மகிழ்ச்சி@officialneelam pic.twitter.com/Q9MqJRUKYu
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) January 3, 2021