வலிமை படத்தில் இந்த டிவி சானல் பிரபலம் இருக்கிறாரா?

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்துடன் இணைந்துள்ள படம் வலிமை. கொரோனாவால் நின்று போன படப்பிடிப்புகள் அண்மையில் தொடங்கின.

ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு சூட்டிங் எடுக்கப்பட்டு வந்தது. அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் லீக்காகின.

இந்நிலையில் இப்படத்தில் குக்கு வித் கோமாளி டிவி நிகழ்ச்சி பிரபலம் புகழ் நடிப்பதாக தகவல்கள் சுற்றி வருகின்றன. படக்குழு இதை உறுதிப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியே….