தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.
திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகைக்கும், தளபதி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
அந்த வகையில் வளர்ந்து வரும் இளம் நடிகை நிதி அகர்வால் சமீபத்தைய பேட்டி ஒன்றில் ” நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நான் தான் கதாநாயகியாக நடிப்பேன் ” என்று கூறியுள்ளார்.
இவர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வரும் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள பூமி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







