கேரட் எண்ணெயால் இவ்வளவு பலன்கள் இருக்கா?

கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது.

கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது.

இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது.

கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது.

குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம்.

மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பிற்கு கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.

கேரட் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்
  • கேரட்- 2
  • ஆலிவ் எண்ணெய்
  • கண்ணாடி ஜார்
செய்முறை
  • கேரட்டை நன்குக் கழுவி அதை துண்டுகளாக நறுக்கி கண்ணாடி ஜாரில் போடுங்கள்.
  • பின் அதில் ஆலிவ் எண்ணெய் கேரட் மூழ்கும் வரை ஊற்ற வேண்டும். பின் அதை நன்கு இறுக மூடிவிடுங்கள். அதை தற்போது இருள் சூழ்ந்த இடத்தில் வையுங்கள். குறைந்தது ஒரு வாரமேனும் இருக்க வேண்டும்.
  • ஒரு வாரம் கழித்து பார்க்கையில் எண்ணெய் ஆரஞ்சு நிறத்தில் மாறியிருந்தால் எடுத்துவிடுங்கள்.
  • அதை கரண்டியால் நன்குக் கலக்கிவிட்டு பின் வடிகட்டிக்கொள்ளுங்கள்.
  • அதை சுத்தமான ஒரு பாட்டிலில் அடைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான் கேரட் எண்ணெய் தயார்.