அடடே இது எப்போ? லட்சுமி ராமகிருஷ்ணனா இது?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த நபராகிவிட்டார். இந்நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்புகள், கேலி, கிண்டல்கள், சிக்கல்கள் என வந்த போதும் பொறுமையாக கையாண்டார்.

அம்மணி, ஹவுஸ் ஓனர் என சமூக விழிப்புணர்வு தாங்கிய படங்களை எடுத்து நல்ல வரவேற்பை பெற்றவர் 2008 ல் பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவுக்கு அம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நான் வீழ்வேன்று என்று நினைத்தோயா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தற்போது நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக சிந்தனையும், பெண்களின் முன்னேற்றத்தையும் விரும்பும் அவர் 15 வருடங்களுக்கு சினிமாவிற்குள் வந்த போது படத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.