சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 15ம் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் தொடர்ந்து ஹைதராபாத் சென்றதை நாம் பார்த்தோம்.
தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்துவந்த அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
எனவே தன்னை தனிமைப்படுத்துக் கொண்ட ரஜினிக்கு கொரோனா டெஸ்ட் செய்ததில் அவருக்கு நெகட்டீவ் வந்துள்ளது.