இந்த வருடம் கொரோனா வந்து எல்லோரையும் வீட்டில் முடக்க வைத்துவிட்டது. அந்த நாட்களை பயன்படுத்தி உடல் எடையை முழுவதும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சிம்பு.
அதன்பிறகு ஈஸ்வரன் படத்தை நடித்து முடித்தார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடக்க இருந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.
சிம்பு அடுத்தடுத்து அதிரடியாக பட வேலைகளில் பிஸியாக இருப்பதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு படு கொண்டாட்டமாக உள்ளது.
இந்த நிலையில் சிம்புவின் பள்ளி பருவ புகைப்படத்தை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் டுவிட்டரில் ஷேர் செய்து இதில் உள்ள நடிகர் யார் என பாருங்கள் என டுவிட் செய்துள்ளார்.
https://twitter.com/VettriTheatres/status/1341304238488473603