அரசியலில் களம் இறங்குகிறாரா தளபதி விஜய்..?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் மாஸ்டர் திரைப்படத்தை முடித்துவிட்டு தளபதி 65 படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவரின் பெயரில் அவரின் தந்தை SAC அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்தார்.

அதன்பின் அந்த அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என தளபதி விஜய் தரப்பில் ஒரு அறிக்கை வெளியானது. இது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் தற்போது ‘நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும்’ என ரசிகர்களுக்கு விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தன்னுடைய மக்கள் இயக்கத்தில் உள்ள பழைய நிர்வாகிகள், ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.