புது சீரியல்! ஹீரோ யார் தெரியுமா?

டிவியில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் மக்களுக்கு அவை அனைத்தையும் பார்க்க தான் நேரமில்லை. காலையில் தொடங்கி இரவு வரை பல சேனலில் பலவிதமாக சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. டிவி நிகழ்ச்சி செய்தவர்கள் கூட சீரியல் நடிகர்கள், நடிகைகளாகி விடுகிறார்கள்.

அவ்வகையில்கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் போட்டியாளராக பங்கேற்று பல குரல், மிமிக்ரி என கலக்கி தற்போது நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் நவீன் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

நவீனுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவரின் வீடியோக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கிறது. விரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள அந்த புதிய சீரியலின் புரமோ இதோ..