இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் சண்டைகளுடன் நடந்து வருகிறது. அனிதா ஓய்வு அறைக்கு தன்னை அனுப்பியது தவறு என்று ரியோவிடம் கடும் சண்டையில் ஈடுபட்டார்.

பின் அறையில் இருந்து வெளியேறியதும் எல்லோரிடமும் சாதாரணமாக நடந்து கொள்கிறார். இந்த வாரம் எலிமினேஷக்கு தேர்வானவர்கள் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா.

இதில் சோம் மற்றம் நிஷாவிற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அநேகமாக நிஷா வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.