சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தைரியமான பெண்ணான அவர் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும், இதில் சந்தேகம் இருப்பதாக சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சித்ராவின் வீட்டின் முன் அவரது அம்மா அழுதுகொண்டே இருக்கிறார். அப்போது திடீரென அவர் எனது மகளை அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று கூறுகிறார்.
ஏற்கெனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் சித்ரா அம்மா இப்படி கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.







