கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் தனுஷ், இப்படத்திற்காக நன்றி கூறி அவர் வெளியிட்ட பதிவு

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வந்தார், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷ் உடன் இணைத்துள்ளதால் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், கர்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாகவும். இப்படத்திற்காக மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, சந்தோஷ் நாராயணன் என அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.