எஸ்டிஆரின் மாநாடு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிலம்பரசன் எந்த ஒரு இடைவேளையும் இல்லாமல் பிஸியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்த அதே வேகத்தில் மாநாடு படப்பிடிப்பில் இணைந்தார்.

படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது, அங்கு எடுக்கப்படும் சிலம்பரசனின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தில் 3வது பிக்பாஸ் சீசன் பிரபலமான டேனியல் இணைந்துள்ளார்.

சிலம்பரசனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.