இயக்குனர் அட்லீயின் அலுவலகத்தில் தளபதி விஜய்.. வெளியானது லேட்டஸ்ட் வீடியோ..!!

தமிழ் திரையுலகில் தளபதி விஜய்யை வைத்து 3 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குனர் அட்லீ.

இவர் தற்போது பாலிவுட்டில் தனது அறிமுக படத்தை ஷாருக்கானை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் யாருடன் கைகோர்த்து தனது தளபதி 65 படத்தை நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

சமீபத்தில் தளபதி 65 படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு தளபதி விஜய் சென்று வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதனால் தளபதி 65 படத்தை பற்றி ஆலோசனை செய்ய அட்லீயின் அலுவலகத்திற்கு தளபதி விஜய் சென்றுருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த தீடீர் சந்திப்பு எதார்க்காக என்று..