மடிசார் புடவை அழகில் விஜே அஞ்சனா!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ரசிகர்கள், ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் VJ அஞ்சனா. ஃபிரீயா விடு, வாழ்த்துக்கள், பாட்டு.காம், பாரு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாக்ஸ் ஆஃபிஸ், நீங்களும் நாங்களும் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தளபதி விஜய்யின் தீவிர ரசிகை இவர். சினிமா பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின் தாயானதால் சினிமா, சின்னத்திரைக்கு சற்று இடைவெளி கொடுத்திருந்தார். ருத்ராக்ஷ் என்ற மகனும் பிறந்தான். தற்போது அக்குழந்தை வயது இரண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் டிவியில் தோன்றினார். ரசிகர்களுக்கு அவரை கண்டதும் மகிழ்ச்சி.

நேற்று திருக்கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட்டது. இந்து சமயத்தை தழுவும் மக்கள் அவர் தன்னுடைய தங்களுடைய வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சிவ ஆலயங்களில் பரணி தீபம், மகா தீபம், சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்வு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வீஜே அஞ்சனாவும் பாரம்பரியமான மடிசார் புடவை அணிந்து வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். இந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவரது கணவர் சந்திர மௌலியும் வீட்டில் பூஜை அறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.