பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்தது: குவியும் வாழ்த்துக்கள்!!

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டவர் இல்லம்” தொடரில் நடித்து வரும் நாயகியான பாப்ரி கோஷ்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு பெங்காலி திரைப்படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமானார் பாப்ரி கோஷ்.

தொடர்ந்து எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான டூயூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

அதனையடுத்து பைரவா, சர்க்கார், விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

அங்கிருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார், இதற்கு முன்பு ஒளிபரப்பான நாயகி தொடரில் கண்மணி கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது என கூறலாம்.

தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், தாத்தாவுக்கும் 5 பேரன்களுக்கும் இடையேயான பாசமே இச்சீரியலின் கதைக்களம்.

இந்த சீரியலில் அசத்தி வந்த பாப்ரி கோஷ்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது, சீரியலில் நடிக்கும் உறவுகள் வாழ்த்துக்கள் கூறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.