இந்த ஐந்து உணவுகளில் இருந்து தள்ளியே இருங்க..!!

நம்மில் பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்னையை வாழ்வில் சந்திக்காமல் இல்லை.

பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை, வேலைப்பளு போன்ற காரணங்கள் தினமும் மன அழுத்ததை அனைவரும் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றோம்.

மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி நாம் சாப்பிடும் சில உணவுகள் கூட மன அழுத்தை அதிகரிக்க காரணமாக இருக்கின்றது.

மன அழுத்ததை அதிகரிக்க சில உணவுகளை தவிர்ப்பது கட்டாயமாகும். அந்தவகையில் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கஃபைன் என்பது பலருக்கும் தினசரி காலை பானமாக இருக்கிறது. மன அழுத்தம், மனப் பதற்றத்தில் இருக்கும்போது கூடுதலாக மாற்றும்.
  • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகள். இது குடல் ஆரோக்கியத்தை பாதித்து மனப்பதற்றத்தை தூண்டும்.
  • ஆல்கஹால் உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும். இதனால் உங்கள் கவலையையும் அதிகரிக்கச் செய்யும்.
  • செரிமானத்தை சீராக்கும் உணவுகள்தான் உங்களுக்கு மனநிறைவை தரும். எனவே எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகள் செரிமானத்தை பாதிக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பழச்சாறுகளில் அதிகம் சேர்க்கப்படுவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரையில் இருக்கும் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் இரத்ததில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.