நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும் தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க அனுமதி அழித்துள்ளதால் விரைவில் இப்படம் வெளியாகும் என நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. ஆம் அதில் மாஸ்டர் படம் 181 நிமிடங்கள் அதாவது இப்படம் 3 மணிநேரம் வரை மாஸ்டர் படம் இருக்கும் என தெரியவந்துள்ளது.







