அத்திப்பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!!

அத்திப்பழம் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துகிறது. அத்திப்பழ சாறை பெரும்பாலானோர் விரும்பி குடித்திருப்பார்கள். அந்த வகையில், அத்திப்பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காணலாம்.

தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலின் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலின் வளர்ச்சி அதிகரித்து உடல் பருமனாகும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய அத்திப்பழ விதைகளை சாப்பிடலாம்.

நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கலை குணப்படுத்த, இரவில் 5 அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் இருக்கும் புரோட்டின், சர்க்கரை சத்து, கால்சிய சத்து, பாஸ்பிரஸ், இரும்பு சத்து போன்றவை உள்ளது.

பிற பழங்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு அதிகளவு சத்துக்கள் உள்ளது. அத்திப்பழம் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உணவு எளிதில் ஜீரணமாவதுடன், கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற உறுப்புகளை சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதவுகிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லடைப்பு நீக்கவும் உதவுகிறது. பெருங்குடலில் உள்ள இறுகிய கழிவுகளை அகற்றவும் உதவுகிறது. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை சரி செய்யும்.