ஒரே வருடத்தில் அசர வைத்த சாதனை!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல் ஜோடி நடிக்க, ஹீரோவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கிராமத்து கதையில் நம்ம வீட்டு பிள்ளை படம் கடந்த செப்டம்பர் 2019 ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. படத்திற்கு பக்கபலமாக இமான் இசையில் பாடல்களும் அமைந்தன. கடந்த வருடம் இதே நாள் இப்படத்திலிருந்து மைலாஞ்சி பாடல் வீடியோ வெளியிடப்பட்டது.

ஒரே வருடத்தில் 35 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. அதே போல லிரிக் வீடியோ தற்போது வரை 17 மில்லியன் பார்வைகளை ஈட்டியுள்ளது.

யுகபாரதி பாடல்களை எழுத பிரதீப் குமார், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். பாடல் சாதனை குறித்து இமான் பகிர்ந்துள்ளார் பாருங்கள்.
https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2Fimmancomposer%2Fstatus%2F1323082793392373762&widget=Tweet