தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் இளம் நடிகையாக இடம்பிடித்துள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், கீதா கோவிந்தம் என ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் ரஷ்மிகா, தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
திரையுலகில் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று உடல் ஆரோக்கியம். அதிலும் நடிகர், நடிகைகளுக்கு ஜிம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அந்த வகையில் ஜிம் ஒர்கவுட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் சமீபத்தில் தனது ஜிம் ஒர்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒர்கவுட் செய்து வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் பெரிதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..







