உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இப்போதிருக்கும் முக்கிய வேலை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது தான். வார இறுதி நாட்கள் அல்லவா. எனவே அவரை நாம் நிகழ்ச்சியில் காணலாம். தவறுகளை சுட்டிக்காட்டுவதும், சரிப்படுத்துவதும் தட்டிக்கேட்பதும் என செய்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை முழு வீச்சில் கவனித்து வருகிறது. வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக அண்மையில் ஏகமனதாக கட்சியினரால் அறிவிக்கப்பட்டார்.
கடந்த சில வருட காலமாக களப்பணி செய்து மக்களை நேரடியாக சந்தித்து வந்ததுடன் சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பி வந்தார்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் அயராது பணியாற்றிய மருத்துவர்களின் குறைகளை நீக்க அடுக்கடுக்காக பல கேள்விகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!