பிக்பாஸ் கமலின் மிரட்டல்! இந்த ஆசை நிறைவேறுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ கமல் ஹாசன் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். அவரின் பேச்சில் சில சமயங்களை அரசியல் சாட்டையடிகளும் இருக்கும். மக்களுக்கான விழிப்புணர்வும் இருக்கும்.

நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பிரச்சனையை சரி செய்யும் போது அவர் தன் வாழ்க்கையில் நடந்த விசயங்களையும் பகிர்ந்துகொள்வார்.

நடிப்பு திறமையில் பெயர் பெற்ற அவர் இதே நிகழ்ச்சியில் தேவர் மகன் படம் குறித்து கடந்த சீசன்களில் பேசியதுண்டு. இதன் இரண்டாம் பாகம் வெளிவரவேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் அவருக்கு இருந்ததை நாம் அறிவோம்.

1992 ல் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், நாசர், ரேவதி கௌதமி என பலரின் நடிப்பில் வெளியாகிய இப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது.

இளையராஜா இசையில் பாடல்களும், பி.சிஸ்ரீராம் ஒளிப்பதிவும், பரதன் இயக்கமும் படத்தில் மண்வாசத்தை வெளிச்சமிட்டு காட்டியது. இதே அக்டோபர் 25 ல் வெளியான இப்படம் தற்போது 28 ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 5 தேசிய விருதுகளையும் 2 ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருதின் விபரங்கள்

    • சிறந்த ஆடியோ – என்.பாண்டு முருகன் – தேவர் மகன்
    • சிறந்த Feature ஃபிலிம் – கமல் ஹாசன், பரதன் – தேவர் மகன்
    • சிறந்த பின்னணி பாடகி – ஜானகி – தேவர் மகன்
    • ஸ்பெஷல் ஜூரி விருது – சிவாஜி கணேசன் – தேவர் மகன்
    • சிறந்த நடிகைக்கான விருது- ரேவதி – தேவர்மகன்