விபத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகர்! பரிதாப நிலையில் மீட்பு.!!

இந்த வருடம் யாரும் எதிர்பாராத ஒரு பெரும் சோகமான சவாலான பிரச்சனை தான் இந்த கொரோனா. மருந்து இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் தொடர் முயற்சிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், அரசும் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனாவால் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கொரோனா தாக்கம் மறைவதற்குள் கேரளாவில் விபத்து சம்பவம், மும்பை, ஆந்திரா, தெலுங்கானாவின் கனமழை வெள்ளம் என மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல தொழில்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது போல சினிமா தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 30 வருட காலமாக பணியாற்றி வரும் காமெடி நடிகர் Prudhvi Raj பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

காரின் முன்பகுதி மிகுந்த சேதமடைந்துள்ளது. ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது.