தமிழில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனிதா ஹசானந்தனி.
இப்படத்தை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடித்த சாமுராய், விஜய் நடித்த சுக்ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் அதிகம் கவனத்தை செலுத்தி வந்தார் நடிகை அனிதா.
மேலும் மிகவும் பிரபலமான நாகினி தொடரில் 3ஆம் சீசனில் நடித்திருந்தார். நடிகை அனிதா ஹசானந்தனி, ரோஹித் ரெட்டி என்பவரை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது கணவருடன் இணைந்து வெளியிட்டு, தங்களது குழந்தைக்காக காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.