இலங்கை பிரபலத்தின் அழகான காதல் கதை..!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ஏஞ்சலோ மேத்யூஸ்.

இலங்கை சர்வதேச அணிக்காக 217 ஒருநாள் போட்டிகளிலும், 86 டெஸ்ட் போட்டிகளிலும், 74 டி20 போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இவரது தந்தை டைரோன் மாத்யூஸ் தமிழர் ஆவார்.

ஏஞ்சலா மேத்யூஸ் 2013 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஹெஷானி சில்வா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது முதலில் ஹெஷானியை மேத்யூஸ் சந்தித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்த தொடங்கியுள்ளனர். காதலை வெளிப்படுத்தியது முதலில் மேத்யூஸ்தான்.

நான் உன்னை காதலிக்கிறேன், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என மேத்யூஸ், ஹெஷானியுடம் கேட்டபோது, பதில் எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார் ஹெஷானி.

வீட்டிற்கு வந்த அவர், உடனே தனது அம்மாவிடம், மேத்யூஸ் என்னை பிடித்திருக்கிறது என கூறினார் என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அம்மா, தனது மகள் மிகவும் ஒழுக்கத்துடன் வளர்ந்துள்ளார் என பெருமிதம் கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்துகொண்ட அம்மா, திருமணம் செய்துவைக்க முடிவுசெய்ததையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் பம்பளப்பட்டியில் உள்ள செயிண்ட் மேரிஸ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.