அனிருத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!!

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கொடண்டடியுள்ளார். அப்போது நடிகை கீர்த்தி சுரேஷுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ..