பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்த நடிகை காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர், இவர் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தார்.

தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார், மேலும் இவர் நடிப்பில் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

அதுமட்டுமின்றி நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் கவுதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் கடந்த 2007-ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பொல்லாதவன், சூப்பர் ஹிட்டான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா நடித்திருந்தார்.

ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக முதலில் நடிக்கவிருந்தது நடிகை காஜல் அகர்வால் தான், ஆம் அப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.