இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி!

பல நடிகர்கள் யாருக்கும் தெரியாமல், விளம்பரம் இல்லாமல் மக்களுக்கு உதவுவதை பழக்கமாகவும் கொள்கையாகவும்
கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரொனா காலத்தில் தன் வீட்டில் வேலை செய்த பணியாளர்களுக்கு முழு சம்பளம் கொடுத்து அவர்களை வீட்டில் இருக்குமாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

இதனையடுத்து, தற்போது வெளிநாட்டில் படிக்க விரும்பிய பட்டலின பெண்ணுக்கு நிதி உதவி அளித்து உதவியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் வசிக்கும் மாணவி சந்தனா.இவர் கம்பியூட்டர் சயின்ஸ் பட்டப்பிரிவில் நல்லமதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதனால் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி சால்ஃபோர்ட் யுனிவர்சிட்டில் படிக்க சந்தனாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தந்தை இல்லாத நிலையில் வீட்டுப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு இருந்ததால் நடிகர் பிரகாஷ்ராஜ் மாணவியின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவரது உதவிக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.