கீர்த்தி சுரேஷின் அடுத்த பிளான்! படக்குழு சொன்ன தகவல்

நடிகை கீர்த்தி சுரேஷ் சர்க்கார் படத்திற்கு பின் அண்ணாத்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இணைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவா இயக்கத்தில் நடித்து வந்தார்.

அதே வேளையில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக Rang De படத்தில் இணைந்திருந்தார். ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் முக்கிய காட்சி மற்றும் பாடல்கள் வெளிநாட்டில் எடுக்கப்படவுள்ளதாம். இதற்கான இத்தாலி நாட்டிற்கு வரும் அக்டோபர் மூன்றாம் வாரம் செல்கிறார்களாம்.

விசா பெறுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதாம். பி.சி.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறாராம்.