சமீபத்தில் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தளபதி விஜய் சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவரின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த சம்பவம் மிகவும் வைரலானது.
இதனை குறித்து பல விதமான விமர்சனங்கள் சமூக வலைதங்களில் பேசப்பட்டது. மேலும் விஜய் தனது வருங்கால அரசியலுக்காக தான் எஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாத் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இதனை குறித்து பேசியுள்ளார் ” இதில் தளபதி விஜய் அவரின் ரசிகரின் செருப்பை எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி ஒரு டிராமா விஜய் போடவேண்டுமா ” என விமர்சனங்களை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.

![dfg]](https://www.netrigun.com/wp-content/uploads/2020/10/dfg-300x167.jpg)





