சீரியல் நடிகையின் முகத்தை பற்றி இழிவாக பேசிய இளைஞர்.!!

பிரபல தொலைக்காட்சி சீரியலான பகல்நிலவு மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி. தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் தமிழ் சினிமாவில் இடம்பெற்று பிரபலமானவர்கள் வரிசையில் இவரும் ஒருவர்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி படவாய்ப்பிற்காகவும் ரசிகர்களை கவர்வதற்காகவும் போட்டோஹுட் எடுத்து பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியாக புடவை அணிந்து கவர்ந்து வருவார்.

இந்நிலையில் கொரானா சமயத்தில் ஊரடங்கில் இருக்கும் ஷிவானி கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்தும், டிக்டாக் வீடியோ செய்தும் ஷாக்கொடுத்தார்.

இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக தொலைக்காட்சி அமைத்து கொடுத்த ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறார்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை நிறுத்தாமல் இருக்கும் ஷிவானி தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அதில் ஒரு இளைஞர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என்று கிண்டல் செய்துள்ளார். அதற்கு ஷிவானி நீங்கதான் எனக்கு சர்ஜரி பண்ணீங்களா? மற்றவர்களை பற்றி கூறும்போது அறிந்து பேசிங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.