மனம் திறந்த தோனி! காரணம் என்ன ??

13 வது ஐபிஎல் தொடர் போட்டி இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 4 வது ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டான் தோனி பந்து வீச முடிவு செய்யவே, இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் விக்கெட்டுக்கு பின் சஞ்சு சாம்சன் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் சுமித் அதிரடியாக ஆட தொடங்கினார். சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிரள வைத்தார். சஞ்சு சாம்சன் 74 ரன்கள் எடுத்தபோது லுங்கி நீகுடி பந்துவீச்சில் தீபக் இடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். கேப்டன் ஸ்டீவ் சுமித் 47 பந்துகளை 69 ரன்கள் எடுத்து தனது விக்கட்டை பறி கொடுத்தார்.

கடைசி ஓவரில் மட்டும் (6, 6, 7நோபால், 7நோபால், 1வைட், 0, 1, 1, 1) 30 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு கிடைத்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 217 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில், டாம் கரன் வீசிய இறுதி ஓவரில் தோனி 3 சிக்ஸர்களை விளாசினார்.  7 வதக்க களமிறங்கிய தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 4 அல்லது 6வது வீரராக களம் இறங்குவது வழக்கம். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 7வது வீரராக களம் இறங்கினார். இது தான் சென்னை அணிக்கு தோல்வி என்று பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தோனி 7வது இடத்தில் களம்மிறங்கியது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. 14 நாள் தனிமைபடுத்தல் தயாரிப்புக்கு என்னை தயார்படுத்த உதவவில்லை. 217 ரன்கள் எட்ட எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை.

ஸ்டீவ் மற்றும் சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதற்காக எங்கள் அணி பந்து வீச்சாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எங்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் பிழை செய்தனர். நாங்கள் அவர்களை 200 ரன்களை தாண்ட விட்டு இருக்க கூடாது.”. என்று தோனி விளக்கமளித்துள்ளார்.