OTT யில் வெளியாகவுள்ள நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படத்தை இவ்வளவு பணம் செலுத்தினால் தான் பார்க்கமுடியுமா?

கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், புதிய திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாகியாகி வருகிறது.

அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் அடுத்த மாதம் 30 தேதி அன்று வெளியாக உள்ளது.

மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா.பெ.ரணசிங்கம் திரைப்படம் OTT யில் அக்டோபர் 2 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்படத்தை Zeeplex முறைப்படி தொலைக்காட்சி வாயிலாக ரூ.199 செலுத்தினால் வீட்டிலேயே காணலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இதில் ஒரு காட்சிக்கு இவ்வளவு செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.