உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள வேண்டுமா?

உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது இன்றைய தலைமுறையினரின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாகிவிட்டது. நாவிற்கு சுவையாக சாப்பிட வேண்டும், ஆனால், எடை அதிகரித்துவிட கூடாது. இது தான் பலரது வேண்டுதலாகவே மாறிவிட்டது.

ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதற்கு முக்கியம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது தான். பல சுகாதார பிரச்சினைகளில் எடை ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.

முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒவ்வொரு எடை யிழப்புப் பயணத்திலும், சிறந்த உடல் எடையை பராமரிப்பது கடினம். இருப்பினும், நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், சில எடையை குறைப்பது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தலாம். எனவே, உடல் எடையை குறைப்பதற்கான சில ஆரோக்கியமான வழிகளைப் பார்ப்போம்.

கடைபிடிக்க வேண்டியவை –

  • உணவில் கட்டுப்பாடு
  • ஆழ்ந்த தூக்கம்
  • காலை உணவு சாப்பிடுதல்
  • உடல் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுதல்
  • போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல்
  • புரதச்சத்து அதிகம் எடுத்துக் கொள்ளுதல்

தவிர்க்க வேண்டியவை :

  • குளிர்பானங்கள் பருகுதல்
  • குக்கீஸ், கேக் சாப்பிடுதல்
  • ஐஸ்கிரீம், சாக்லேட், பீட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் உண்ணுதல்
  • எண்ணெயில் பொரித்த, கொழுப்பு மிகுந்த சிவப்பிறைச்சி அதிகம் எடுத்துக் கொள்ளுதல்

உடல் எடையை குறைக்க டிப்ஸ்:

  • தண்ணீர் உடலுக்கு நீரூட்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • கொழுப்பை குறைக்க, மெடபாலிசம் அதிகரிக்க தேங்காய் எண்ணெய்யில் சமையல் செய்து சாப்பிடலாம்.
  • நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவி செய்யும்.
  • புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெடபாலிசம் அதிகரிக்கச் செய்யும்.
  • கேரட் ஜூஸில் உடல் எடையை குறைக்க குடிக்கலாம்.
  • ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • உடல் எடையை குறைத்து பெடபாலிசம் அதிகரிக்க கிரீன் டீ குடிக்கலாம்.
  • பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும்.