காரம் அதிகமாக சாப்பிடுபவரா நீங்கள்?

அறுசுவைகளில் பெரும்பாலானோர் விரும்புவது இனிப்பு, காரம் மற்றும் உப்பு தான்.

ஆனால் இவை அனைத்தும் சமச் சீரில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இதில் காரத்தை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்.

சிலருக்கு உணவில் காரம் இருந்தால் தான் சாப்பிட்ட உணர்வு ஏற்படும். காரசாரமான உணவு உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் கபத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை வளர்க்கும். புண்களை ஆற்றும். உடலைச் சுத்தப்படுத்தி புலன்களைத் தெளியச் செய்யும்.

உறைந்த ரத்தத்தை உடைக்கும். வீக்கம், பருமன், கிருமி நோய், தொண்டை நோய், நஞ்சு, தோல் நோய், அரிப்பு இவற்றைத் தணிக்கும்.

அதிகமாக காரம் சாப்பிட்டால் சில பிரச்சினைகளையும் விளைவித்துவிடும். நாவறட்சி, மயக்கம், வெறி, வாந்தி, உடல் களைப்பு, விந்து உலர்தல், நடுக்கம், தலைசுற்றல், உடலை இளகச் செய்தல் போன்றவறை ஏற்படுத்திவிடும்.

இதோடு கை கால்கள், விலாப் பக்கம், முதுகு, இடுப்புப் பகுதிகளில் வாயுவின் சீற்றத்தை உண்டுபண்ணி, குத்தல் வலி, சுருக்கம், உடைப்பது போன்ற வலியை உண்டாக்கும்.