காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போது, அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கினைப் பெறுகிறது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.

நம்மில் சிலர் ஏன் இது போன்ற சில விடயங்களை செய்கிறோம் என்று தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

  • எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க உதவுகிறது.
  • இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும்.
  • ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
  • இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் விரைவில் உடல் எடை குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன.
  • அதிலும் இந்த ஜூஸில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.
  • மேலும் இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
முக்கிய குறிப்பு

குளிர்ச்சியான நீரை விட எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து பருகினால் தான் செரிமான மண்டலத்தில் எளிதில் இயக்க முடியும்.