தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு இயற்கை தீர்வு வேண்டுமா?

இன்று பலரும் தலைமுடி உதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.

இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படும்.

எனினும், இது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. இதற்கு நல்ல பல தீர்வுகள் உள்ளன.

அவற்றை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலனை எதிர் பார்த்தது போல் பெறலாம்.

தற்போது தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு இயற்கை முறையில் என்ன தீர்வு என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை
  • ஆவாரம்பூ- கைப்பிடியளவு
  • கறிவேப்பிலை- கைப்பிடியளவு
  • வெந்தயம்- 4 ஸ்பூன்
  • பூந்திக் கொட்டை- தேவையான அளவு
செய்முறை

ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும்.

இந்த பொடியை தலைக்குத் தேய்த்து அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.

இதனை வாரத்தில் 2 முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இயற்கையான பொருட்கள் அடங்கி உள்ளதால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.