உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.77 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதித்து இதுவரை உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 9.01 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,77,28,642 கோடியாக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,01,629 ஆக உள்ளது. 1 கோடியே 98 லட்சத்து 20 ஆயிரத்து 162 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 65,14,231 பேரும், இந்தியாவில் 43,67,436 பேரும், பிரேசிலில் 41,65,124 பேரும், ரஷியாவில் 10,35,789 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,98,20,162 ஆக உள்ளது. தற்போது 70,06,851 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.