கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நம்பமுடியாத அற்புதங்கள்

கேரட் சுவையானது மட்டுமல்ல உடலுக்கு நல்ல ஆரோக்கியமானதும் கூட.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

கேரட் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகள்

இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.

கண்களுக்கு நல்லது

கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடை

குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.

புற்றுநோயை எதிர்க்கும்

புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

சருமம் பளபளக்க

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.