நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு காலத்தில் ராசியற்ற நடிகை என சிலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதையும் கடந்து வெகு சீக்கிரமே தேசிய விருது பெற்று சாதித்து காட்டினார்.
தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்திற்கு பின் பெண் குயின் என புதிய படம் அவருக்கு அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடுத்ததாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி நடித்திருந்த Miss India படம் ரூ 38 கோடிக்கு விலைபோயுள்ளதாம்.
ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் சாட்டிலைட் , டிவி உரிமை ரூ 8 முதல் 10 கோடிக்கு விலையோயுள்ளதாகவும் கூறப்படுகிறது.







