தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிகப்படியானோர், குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
என்னதான் குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடும். ஒரு சிலரின் குறட்டை சத்தம் அலறுவது போல இருக்கும். இதனால் உடன் படுப்பவர்கள் தூக்கத்தை இழக்க நேரிகிறது.
குறட்டை என்பது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பெரும் சத்தத்தை ஏற்படுத்துகிறது.
குறட்டையானது சைனஸ், அதிகப்படியான உடல் எடை, குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும்.
மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்
குறட்டை என்று சொல்லும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர் மது அல்லது புகை பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளாரா என்பது தான். அப்படி இருந்தால் அதனை தவிர்த்தல் வேண்டும். முக்கியமாக தூங்க போகும் முன் மது மற்றும் புகை பிடிக்காமல் இருப்பதன் மூலம் குறட்டை வருவதை தடுத்து விடலாம்.
நேராக படுத்து தூங்க வேண்டாம்
தூங்கும் போது நேராக படுக்காமல் சைடாக அதாவது இடது அல்லது வலது புறம் திரும்பி படுத்துக் கொள்ள வேண்டும். இது சுவாச குழாயில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்து சுலபமாக சுவிசிக்க உதவி குறட்டையை தடுக்கும்.
தலையை சிறிதளவு தூக்கியவாறு தூங்க வேண்டும்
படுக்கும் போது நம் தலையை ஒரு நான்கு இன்ச் அளவு தூக்கியவாறு வைத்து படுத்தால் சுவாசக் குழாய் நன்றாக திறந்து குறட்டை வராமல் செய்யும்.
பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள கூடாது
பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது சிறந்தது. இது போன்ற பொருட்கள் தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் வீக்கம் உருவாக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை தவிர்த்து விட வேண்டும்.
பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்
- ஆப்பிள் – 4
- எலுமிச்சை – 1/8
- கேரட் – 4
- இஞ்சி – 2 துண்டு
- தண்ணீர் – 1/4 கப்
செய்யும் முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து ஜூஸ் எடுத்தால் குறட்டை விரட்டி யடிக்கும் பானம் ரெடி.
குடிக்கும் நேரம்
இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.







