தலைச்சுற்றல் வயிற்று உபாதைகளை கட்டுப்படுத்தும் சுண்டைக்காய் துவையல்.. செய்வது எப்படி?

சுண்டைக்காய் துவையலானது பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி, வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுண்டடைக்காய் வற்றல் – கால் கப்

பொட்டுக்கடலை – ஒரு கைப்பிடி

தேங்காய் துருவல்- சிறிதளவு

மிளகு – கால் டீஸ்பூன்

சீரகம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

மிக்சியில் சுண்டைக்காய் வற்றல், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சிறிது தண்ணீல் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சத்தான சுண்டைக்காய் வற்றல் துவையல் ரெடி.