சிறுநீரகத்தை பாதிக்கும் சில தவறான பழக்கவழக்கங்கள்

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன.

இது கஜு கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக நம் உடலில் இருக்கிறது.

இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால்லாகும். இதுவே சிறுநீரகம்.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகமாகிவிடும்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

சிறுநீரக பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணங்கள்

உணவு சாப்பிடாமல் இருப்பது

நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் சிறுநீரகங்களை பாதித்து விடும்.

வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துதல்

கால், கை, தலை வலி போன்றவற்றிற்கு வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் சாப்பிட்டால் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

மது அருந்துதல்

மது அருந்துவது சிறுநீரகங்களை பாதிக்கும். வெறும் வயிற்றில் மது அருந்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை சிறுநீரகத்தை பாதித்து விடும்.

உப்பு அதிகமாக சாப்பிடுதல்

உணவில் அதிகமாக உப்பை சேர்த்து சாப்பிட்டால் அவை சிறு நீரகத்துக்கு அதிக வேலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தண்ணீர் குடிக்காமல் இருத்தல்

சிறுநீரகத்துக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமான ஒன்று. உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

இன்றைய காலத்தில் படிக்கும் இளைஞர்கள் முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு தண்ணீரை அருந்துவது கிடையாது. போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சிறுநீரை அடக்கி வைத்தல்

சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தால் அவை சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் சிறுநீரகத்தில் கல்லை உருவாக்கும். அதுவே காலப்போக்கில் சிறுநீரகத்திலும் சிறுநீரக பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்தி பிரச்சினையை உருவாக்கி சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்து விடும்.