இடுப்பை சுற்றி மட்டும் அதிகமாக சதை தொங்குதா? இதனை எப்படி குறைக்கலாம்?

பொதுவாக குண்டாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பை சுற்றி அதிகளவு சதை காணப்படுவதுண்டு.

இதை குறைக்க வில்லையெனில் நாளடைவில் உயிருக்கே ஆபத்தான பல நோய்களை சந்திக்க நேரிடும்.

எனவே ஆரம்பத்தில் குறைக்க உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என்பவற்றை எடுப்பது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது இடுப்பை சுற்றி இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

  • அவகேடோ பழத்தில் கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் அதிகம். இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உயிரணு சவ்வுகளை உறிஞ்சி, செல்களை கொழுப்கை எரிக்கும் ஹார்மோன்களுடன் சேர்ந்து சிறப்பாக செயல்பட உதவுகிறது.
  • எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வீதம் தேங்காய் எண்ணெய் குடித்து வரலாம். இதில் ட்ரைகிளிசரைடுகள் (எம்.சி.டி) நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்குவதோடு, அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் ​இலவங்கப்பட்டையை கலந்து குடிக்கலாம். அல்லது நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் டீ, காபியுடன் ஒரு சிட்டிகை அளவு பட்டை பொடியைச் சேர்த்துக் குடித்தும் வரலாம். ஏனெனில் இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கு வேகமாக நகர்த்த உதவுகிறது, அதேபோல இன்சுலின் உறபத்தியை சீராக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
  • காபி அட்ரினலின் சுரப்பியைத் தூண்டுகிறது, இது உங்கள் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை எரிக்க உதவியாக இருக்கிறது. தினமும் நீங்கள் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • மிளகாய் கேப்சைசின் எனப்படும் வேதிப்பொருள் கலவைளைக் கொண்டது. இது வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரித்து உடலில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்கிறது.