OTT தளத்தில் வெளிவரும் சூரரை போற்று படத்தின் மற்றொரு அதிரடி செயல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது இயக்குனர் சுதா கே. பிரசாத் இயக்கத்தில் தனது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் சூர்யா.

இதற்கு திரையுலகை சேர்ந்த விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமைாளர்கலும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தை அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குண்டான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.