உயிருக்கே மிக ஆபத்தானதாக மாறும் உணவுகள்!

“உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது பழமொழி. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றால் அது உணவு மட்டுமே.

ஒவ்வொரு நாட்டு மக்களும் ஏன் ஒரே நாட்டில் வாழும் வெவ்வேறு மாநில மக்களுக்கும் கூட உணவு முறைகளில் வித்தியாசம் இருக்கும். உணவு முறை என்பது பழங்காலந்தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒன்று.

காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.

காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியம்.

ஆரோக்கியமற்ற காலை உணவு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயல் உயிருக்கே உலை வைக்கும். அப்படியான சில உணவுகளை பார்க்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம், பைபர் மற்றும் மக்னீசியம் உள்ளது.

இதனால்தான் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடக்கூடாது. அதிகளவு மக்னீசியம் இதை கோளாறுகளை உண்டாக்கக்கூடும்.

பேரிக்காய்

காலை உணவிற்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளை பாதிக்கக்கூடும், அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவு பைபர்.

வயிற்றின் உட்புற சவ்வானது மிகவும் மென்மையானது. இதனால் அதிகளவு பைபரை தாங்க இயலாது. காலை உணவுக்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது அல்சரை உருவாக்கும்.

தக்காளி

தக்காளியில் அதிகளவு டானிக் அமிலம் உள்ளது இது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது இது நெஞ்செரிச்சல் மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்கும். எனவே காலை உணவிற்கு முன் தக்காளி சாப்பிடுவதை தவிருங்கள்.

தயிர்

தயிரில் உள்ள லெக்டோபேசிலஸ் உறையவைக்கும் பண்பு கொண்டது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது.

காலை உணவிற்கு முன் தயிர் சாப்பிடும்போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அழிக்கக்கூடும்.

மேலும் இதனால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கமால் போகலாம்.